பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு

பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு
X

பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில்.

பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய் கிழமை திருவிழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவிற்கு, பென்னாகரம் மட்டுமில்லாமல், தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்த கோவிலுக்கு திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தியும், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

மேலும் முனியப்பன் வேடமிட்டு, குதிரையுடன் ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்தனர். பெண்கள் பொங்கல் வைத்தும் தங்களது பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இன்று முனியப்பன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகளை பக்தர்கள் பலியிட்டனர்.

மேலும் முனியப்பன் கோவில் திருவிழாயொட்டி, பி.அக்ரஹாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு, சிறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பொதுமுடக்கம் என்பதால், கடந்த ஆண்டை விட பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

இந்த திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க பென்னாகரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தருமபுரி-ஒகேனக்கல் பிரதான் சாலை என்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future