இன்டூர் அருகே பைக்கிலிருந்து விழுந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

Asha Kaviyazhini News Tamil
X

Asha Kaviyazhini News Tamil

இன்டூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம், இன்டூர் அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் இவரது மகன் முனிராஜ்,45. இவர் நேற்று மாலை நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம்பட்டி பச்சையம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ஈச்சம்பட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வலி அதிகமாகவே உடனடியாக நேற்று இரவு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!