பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி வாக்களிப்பு

பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி வாக்களிப்பு
X
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி வாக்களித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று ஏப்ரல் (6ம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அஜ்ஜனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் பாமக தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான ஜி.கே.மணி இன்று தனது வாக்கை பதிவு செய்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!