'எல்லாரும் ஓட்டு போடுவோம்' அரசு கல்லூரி மாணவிகள் உறுதிமொழி

எல்லாரும் ஓட்டு போடுவோம்   அரசு கல்லூரி மாணவிகள்  உறுதிமொழி
X
நூறு சத வீதம் ஓட்டு போடுவோம் என்று அரசு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பென்னாகரம் அருகே உள்ள மாமரத்து பள்ளம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் நூறு சதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், தனது வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் தாசில்தார் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!