தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு: கத்தியால் குத்தி ஒருவர் கொலை

தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு:  கத்தியால் குத்தி ஒருவர் கொலை
X

கொலை செய்த சுந்தரம்

தருமபுரி அருகே சிக்கன் கடையில் குடிபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி புஷ்பா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

அண்ணாதுரை கடந்த ஓர் ஆண்டுக்கு முன் மல்லாபுரத்தில் உள்ள ஒரு சிக்கன் கடையில் பணி செய்து வந்துள்ளார். தற்போது தருமபுரியில் உள்ள ஹலோபிரிக்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஓர் ஆண்டுக்கு முன் வேலை பார்த்த சிக்கன் ரைஸ் கடைக்கு அண்ணாதுரை சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் இருந்த சோளப்பாடியை சேர்ந்த சுந்தரம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது சுந்தரம், தகாத வார்த்தைகளால் பேசியும் கடையில் இருந்த கல்லா பெட்டியில் உள்ள பணத்தையும் எடுக்க முயன்றுள்ளார்.

அவரை தடுத்து நிறுத்திய அண்ணாதுரை, எதற்காக இப்படி செய்கிறீர்கள்.குடி போதையில், தேவையில்லாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என தட்டிக் கேட்டுள்ளார். இதில் அண்ணாதுரை-சுந்தரம் இருவருக்கும் இடையே கடுமையான வாய் தகராறு ஏற்பட்டவே, ஆத்திரமடைந்த சுந்தரம், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணாதுரையின் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் அண்ணாதுரைக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அருகிலிருந்தவர்கள் ரத்தம் வெளியேறாமல், தடுக்க துணியை கட்டி, ஒரு கடையின் முன் அமர வைத்து முதலுதவி அளித்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரத்த போக்கு அதிகமாக இருந்ததால், முதலுதவி கொடுக்கப்பட்டு, தருமபுரியிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் சேலம் செல்லும் வழியிலே அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அண்ணாதுரையை கத்தியால் குத்திய சுந்தரம் மற்றும் அவரது நண்பரையும் இருவரையும் இண்டூர் காவல் துறையினர் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சிக்கன் ரைஸ் கடையில் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தி ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!