காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுநர்: தேடும் பணி தீவிரம்

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுநர்: தேடும் பணி தீவிரம்
X

பைல் படம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த வாலிபர் எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

சென்னை அருகே ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தமிழரசன் (24). இவர் தனது நண்பர்களுடன் விஜயதசமியன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார்.

ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைக் கண்ட நண்பர்கள் ஒகேனக்கல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai and business intelligence