தர்மபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகா அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து நேற்றுவரை விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட மலைப் பகுதியைச் சார்ந்த இடங்களில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து தற்போது விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இதனால் ஒகேனக்கலில் ஐந்தருவி,மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நீர் வராத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?