ஒகேனக்கலில் விதிமீறி பரிசல் பயணம்: ஆபத்து நேர்ந்தால்தான் அதிகாரிகள் விழிப்பார்களா?
தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. இங்கு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா பரவலால், கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி கார்களில் வருகின்றனர். அவர்கள் பென்னாகரம், மடம் செக்போஸ்ட் பகுதியில் தங்களுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, அரசு பஸ்சில் ஒகேனக்கல்லுக்கு வருகின்றனர். அங்கு தடையை மீறி, அருவியில் குளித்தும், மாமரத்துகடவு வழியாக ஐந்தருவி, மணல்திட்டு பகுதியில் பரிசல் சவாரியும் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு பரிசலில் செல்லும் போது, லைப் ஜாக்கெட் இன்றியும், முகக்கவசம் இல்லாமலும் செல்கின்றனர். காவியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகமும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தொற்று பரவல், விபத்து நேரிடும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இனியாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு, அனுமதியின்றி பரிசல் இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu