ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இடங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் பல மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பல மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜப்பான் பன்னாட்டு நிதி உதவியுடன் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் காவேரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பல மாவட்ட மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை மறுநாள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய வுள்ளார். அதனால் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, கூட்டு குடிநீர் திட்ட இடங்களான மடம் சோதனைச் சாவடி அருகே அமைந்துள்ள நீரேற்று நிலையம் மற்றும் யானை பள்ளம் என்னும் இடத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஒகேனக்கலில் அமைந்துள்ள நீர் உறிஞ்சும் நிறம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .
ஆய்வின்போது கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களிடம் சரியான முறையில் சுத்திகரிக்க படுகின்றனவா என கேட்டறிந்தார். பின்னர் ஒகேனக்கல் ஹோட்டல், தமிழ்நாடு பயணியர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu