காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைவு

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடக மற்றும் தமிழக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த மூன்று நாட்களாக நாட்களாக நீர்வரத்து குறைந்தும் அதிகரித்தும் வருகிறது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்குலுவுக்கு வினாடிக்கு 17,000 கன அடியில் இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி 24ஆயிரம் கன அடியிலிருந்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தொடர்ந்து மழை குறைந்ததால், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை நீட்டித்துள்ளது. தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வருவாய் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!