ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர்

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள நீரால், ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் காவிரி நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர், நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.

காவிரியில் நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று மதியம் 1மணி நிலவரப்படி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த 8 மாதமாக ஒகேனக்கல் ஐந்தருவி பகுதிகளில் நீர்வரத்து இன்றி காணப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரித்ததால் ஐவர் பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!