ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை: ஆட்சியர் உத்தரவு

ஒகேனக்கல்  காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை: ஆட்சியர் உத்தரவு
X

பைல்படம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து காலை 6:00 மணி நிலவரப்படி 20000 கனஅடியாகவும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆற்றில் இறங்க, அருவியல் குளிக்க, ஆற்றை கடக்க தடைவிதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் படகுகளை இயக்கவும் படகு சவாரி செய்யவும் மறு உத்தரவு வரும் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக ஒகேனக்கல் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது. தடையின் காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!