நிலத்தகராறில் அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பி கைது

நிலத்தகராறில் அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பி கைது
X

கைது செய்யப்பட்ட அம்மாச்சி 

பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் தேடி கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் ராஜா (55). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தம்பி அம்மாசிக்கும்(52) ராஜாவுக்கும் பொது வழிப்பாதை தொடர்பாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அம்மாசி தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ராஜா, அம்மாசியிடம் நிலப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராஜாவின் தலையில் அம்மாசி மண்வெட்டியால் தாக்கியதில் தலையில் பலத்த காயத்துடன் சம்பவிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அம்மாசியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அம்மாசியை இன்று கைது செய்தனர். தம்பி அண்ணனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


படவிளக்கம்

பாப்பாரப்பட்டி அருகே அண்ணனை கொலை செய்த அம்மாசி

Tags

Next Story
ai marketing future