ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், துணை தலைவர் வெளிநடப்பு, பரபரப்பு

ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்,  துணை தலைவர் வெளிநடப்பு, பரபரப்பு
X

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்.

ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் துணை தலைவர் வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.

இதில் ஏஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒன்றிய குழு தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் எனவும், பல்வேறு காண்ட்ராக்ட்களில் ஊழல் செய்துள்ளார் என கூறி 6 கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு துணைத் தலைவர் உட்பட திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்பு இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!