தடுப்பூசிக்கு ஏங்கும் மலைக்கிராம மக்கள்; பென்னாகரம் தொகுதியில் அலட்சியம்
அலக்கட்டு மலைக்கிராமம்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்டது கோட்டூர் மலை கிராமம். இந்த மலைகிராமங்களில் ஏரிமலை, அலக்கட்டு மலைக்கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் திணை, கேழ்வரகு உள்ளிட்டவைகள் உணவாக உட்கொண்டு வருகின்றனர். இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. அடிவாரத்தில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்து மக்கள் நடந்தே பயணிக்கும் நிலை உள்ளது.
இந்த கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். தற்போது மக்கள் கூலி வேலைகளுக்காக வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். கொரோனோ தொற்றால் மலை கிராமம் பாதிக்கப்படாமல் இருக்க காட்டில் தனியாக வாழும் அவலநிலை உள்ளது.
இதுவரை சுகாதாரத்துறையினர் அம்மலை கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வோ, தடுப்பூசி முகாமோ நடத்தப்படவில்லை. மலை கிராமங்களுக்கு முழுமையாக தடுப்புசி செலுத்தப்பட்டு வருகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஆனால் எதிர்மறையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளுக்கு இதுவரை கொரோனோ தடுப்பூசியோ, விழிப்புணர்வோ ஏற்படுத்தபடவில்லை என மலை கிராம மக்கள் கூறுகின்றனர். காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்டு வரும் மலை கிராம மக்கள் கொரோனோ தொற்றால் அவதிப்பட்டு சிகிச்சையின்றி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
ஆகவே இம்மக்களின் கோரிக்கை ஏற்று கொரோனோ விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பூசி செலுத்த படவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu