தர்மபுரியில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் :மரக்கன்று நட்டார் முன்னாள் அமைச்சர்

தர்மபுரி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 14 இடங்களில் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.
தர்மபுாி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிாிவு சாா்பில் பாலக்கோடு தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாடியில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி பி.சதீஷ் குமார் தலைமை வகித்தார்.
தர்மபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பொன்விழா ஆண்டை முன்னிட்டு 50 தூய்மை பணியாளர்களுக்கு சேலை, 50 வகையான,1000 மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
அதிமுக சார்பில் உருவாக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பூங்காவை திறந்து வைத்தார். 50 அரசு பள்ளி மாணவர்களுக்கு அம்மா பசுமை விருது வழங்கினார். மூத்த நிர்வாகிகளை கௌரவித்தார்.
இதனையடுத்து மேல்என்டப்பட்டி, கொல்லுப்பட்டி, மூக்கம்பட்டி ,சின்ன சவுலூர் ,செங்கொடி ஆகிய கிராமங்களில் புரட்சி தலைவர் எம் .ஜி ஆர், அம்மா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், அதிமுக கொடி ஏற்றினார். தூய்மை பணியாளர்களுக்கு சேலை வழங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், கழக விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன்,மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன்,தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu