தர்மபுரி: பைக் மீது லாரி மோதியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

தர்மபுரி: பைக் மீது லாரி மோதியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி
X

விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் முத்துராஜ்.

தர்மபுரி அருகே, பைக் மீது லாரி மோதியதில், உடல் நசுங்கி, அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.

தர்மபுாி அடுத்த ஏ. செக்காரப்ட்டியை சோ்ந்தவா் முத்துராஜ் 45. இவர், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசுப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை தன்னுடைய சொந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தவாறு சென்றுள்ளார்.

அப்போது, இண்டூா் கடைவீதி வழியாக செல்லும்போது, பின்னாடி வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி, பைக் மீது உரசிச் சென்றது. இதில், ஆசிரியர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். டிப்பர் லாரி சக்கரங்களுக்கு இடையே விழுந்ததால், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே முத்துராஜ் பலியானார்.

உடனடியாக வந்த இண்டூா் காவல்துறையினர், உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டி சென்ற டிரைவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story