பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள்: ஒகேனக்கல்லில் ஒத்திகை
ஒகேனக்கல் பகுதியில் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்.
தருமபுரி மாவட்டம், பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை மீட்பது, உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருட்சேதம், வெள்ள அபாய காலங்களிலும் தடுப்பது உள்ளிட்ட ஒத்திகை மேற்கொள்ள ஒகேனக்கல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆறு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழம் தெரியாமலும் சுழலில் சிக்கியும் பலரும் உயிரிழக்க நேரிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாவட்டங்களில் இருந்து இப்பகுதியில் வருவதற்குள் பாதிக்கப்படும் நபர் உயிரிழக்க நேரிடுகிறது.
இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டும், மேலும் அந்தந்த மாவட்டங்களிலேயே பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்காக இன்று பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்களுக்கு நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, ஆற்று நீரின் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்து காப்பாற்றும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும் ஆற்றில் அதிகளவு நீர் வரும்போது சாதாரண படகுகளை இயக்கும் முறை மற்றும் விசைப்படகுகள் உள்ளிட்டவற்றை இயக்கி பேரிடர்களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஒத்திகை நடைபெற்றது.
இந்த பயிற்சியில் தருமபுரி மாவட்ட காவல் துறையிலிருந்து பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu