ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக நீடிப்பு.
X
By - Ananthan, Reporter |26 Dec 2020 8:30 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மூன்று தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.மேட்டூர் அணை நிலவரம்:
நீர்மட்டம் : 106.770 அடி.நீர்இருப்பு : 73.894டி.எம்.சி.நீர் வரத்து :வினாடிக்கு 1,270 கன அடியாக உள்ளது.டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu