மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி
X

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மர்ம விலங்கு கடித்து 11ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பத்ரஹள்ளி ஆரல்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கவுண்டர். இவர் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனது விவசாய நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். காலையில் தனது ஆட்டுபட்டியில் வந்து பார்த்த போது 11 ஆடுகள் மா்மவிலங்கு கடித்து உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை ஆய்வு செய்து ஆடுகளை புதைக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து குழி தோண்டி உயிரிழந்த 11 ஆடுகளையும் புதைத்தனர். ஆடுகள் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!