சுற்றுலா பயணிகள் வருகை- களை கட்டியது ஒகேனக்கல்

சுற்றுலா பயணிகள் வருகை- களை கட்டியது ஒகேனக்கல்
X

ஒகேனக்கலிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் களைகட்டியது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர் பாணி, தொங்குபாலம், முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா, மீன் காட்சியகம் ஆகிய இடங்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு அளவில் காணப்பட்டது. மேலும் சுற்றுலாப்பயணிகள் உடல் சூட்டை தணிக்கும் வகையில் ஆயில் மசாஜ் செய்தும், பரிசலில் சென்று காவிரி அழகை கண்டு ரசித்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒகேனக்கல் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!