மூக்கனூரில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: ஒரு கிலோ பறிமுதல்

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

மூக்கனூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி நேற்று தர்மபுரி- மொரப்பூர் ரோட்டில் மூக்கனூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சம்பவ இடத்தில் காரிமங்கலம் வட்டம், வகுரப்பபம்பட்டி அடுத்த பொரிசாகவுண்டம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணிகண்டன் வயது 31. என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளை நிற பையில் ஒரு கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி அருகில் சென்று விசாரணை நடத்தியபோது கஞ்சா விற்பனை செய்தது மணிகண்டன் ஒப்புக்கொண்டார். இதனால் மணிகண்டனை அவர் கைது செய்தார். ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது