பாப்பிரெட்டிப்பட்டியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ரங்கம்மா பேட்டையைச் சேர்ந்தவர் விக்டர் சந்தோஷ் பால் இவரது மகன் சம்பத் குமார்,35.செவிலியராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த 7 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த விரக்தியில் இருந்த சம்பத்குமார் நேற்று இரவு 8 மணிக்கு வீட்டில் உள்ள கொக்கியில் கேபிள் ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story