பாப்பிரெட்டிப்பட்டியில் 3 பெண் குழந்தைகளுடன் சுடுகாட்டில் வாழும் விதவைப் பெண்

பாப்பிரெட்டிப்பட்டியில் 3 பெண் குழந்தைகளுடன் சுடுகாட்டில் வாழும் விதவைப் பெண்
X

சுடுகாட்டில் வசித்து வரும் பெண்.

பாப்பிரெட்டிப்பட்டியில் வாழ வழியின்றி 3 பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் சுடுகாட்டில் வாழ்ந்து வருகிறார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரபீக்,வயது 30. இவரது மனைவி ரஜ்ஜியா, வயது28. இவர்களுக்கு ஹப்சரி,வயது10, ரிவானா,வயது 8, பர்ஜானா,வயது 6 ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளன. கொரோனோ பொது முடக்கத்தில் திருப்பூருக்கு கூலி வேலைக்கு சென்றனர். அங்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த ரபிக் உயிரிழந்தார்.

பின்னர் ரஜ்ஜியா தனது, மூன்று பெண் குழந்தைகளுடன் பாப்பிரெட்டிப்பட்டியில் தனது தந்தை இம்ரான் வசிக்கும் இஸ்லாமியர் சுடுகாட்டிற்க்கு வந்து விட்டார். தற்பொழுது மூன்று குழந்தைகளும் அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். வாழ வசதியின்றி,இருக்க இடமின்றி தனது தாய், தந்தை யுடன் சுடுகாட்டில் ரஜ்ஜியா வசித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான், +2 வரை படித்து உள்ளேன். எனது கணவர் இறந்த பிறகு சுடுகாட்டில் வாழும் எங்கள் தாய் தாஜுன், தந்தை இம்ரானுடன் வசித்து வருகிறேன். ஏற்கனவே அவர்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதாகவும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவதாகவும், தனதுதந்தை யாராவது இறந்தால் குழிவெட்டி அதில் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அதன் மூலம் தாய், தம்பி, அக்கா, அவர்களின் குடும்பத்தார், 9 பேர் நாங்கள் 4 பேர் சேர்ந்து மொத்தம், 13 பேர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.இதுவரை பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. ஆகவே, வாழ வழியின்றி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சுடுகாட்டில் வாழும் எங்களுக்கு வீடும், உதவிகள் வழங்கிட அரசு முன் வர வேண்டும் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!