ஏற்காட்டில் தொடர் நீர்வரத்தால் வாணியாறு அணை நிரம்பியது: உபரிநீர் திறக்க வாய்ப்பு

ஏற்காட்டில் தொடர் நீர்வரத்தால் வாணியாறு அணை நிரம்பியது: உபரிநீர் திறக்க வாய்ப்பு
X

வாணியாறு அணை நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

ஏற்காட்டில் தொடர் நீர்வரத்த்தின் காரணமாக வாணியாறு அணை நிரம்பியதால் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் உயரம் 65 அடியாகும். வாணியாறு அணையில் தண்ணீர் நிரம்பினால் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் வழியாக வெங்கடசமுத்திரம், மெனசி, பூதநத்தம், பறையப்பட்டி, தென்கரைக்கோட்டை, ஓந்தியம்பட்டி மற்றும் அதிகாரபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஏரிகளில் நீர் நிரம்பி, சுமார் 10 ஆயிரத்து 517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதனால் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.

தற்போது 62 அடியாக உள்ளது. ஏற்காடு மலைப்பகுதியில் தொடர்ந்து நீர் வருவதின் காரணமாக வாணியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இது குறித்து வாணியாறு அணை உதவி பொறியாளர் பரிமளா கூறுகையில், வாணியாறு அணை 65 அடியை கொண்டது. தற்போது 62 அடி நிரம்பி உள்ளது. அணைக்கு 40 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணை 63 அடி நிரம்பினால் அணையின் பாதுகாப்பு கருதி எந்நேரமும் திறக்க வாய்ப்பு உள்ளது. நாளை உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ai and business intelligence