புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாவு

புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாவு
X
பைல் படம்.
புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையம் உள்ளது சேலம் -சென்னை ரயில்வே இருப்புப் பாதை மார்க்கமாக நால் தோரும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில், விரைவு வண்டி வந்து செல்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். தகவலை அடுத்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடிபட்ட முதியவர் வலது கையில் கோவிந்தம்மாள் என்று பச்சை குத்தப்பட்டு உள்ளது. இறந்தவர் உள்ளூரா, வெளியூரா , ஏதேனும் காரணத்தால் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare