வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பயிற்சி

வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பயிற்சி
X

அ.பள்ளிபட்டி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது

அ.பள்ளிபட்டி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது

அ.பள்ளிபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பாக வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் இயற்கை விவசாய பயிற்றுநர் எஸ்.பி.பி. பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுவது மற்றும் பாரம்பரிய அரிசி களின் மருத்துவ குணங்கள் நாற்றங்கால் தயாரிப்பு, 168 பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். பயிற்சியில் விதை விதைச்சான்று அலுவலர் திருமதி காவியா அவர்கள் கலந்துகொண்டு தரமான விதைகள் முக்கியத்துவம் குறித்தும், அழகாய் சான்றளிப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார செயலாளர் சரவணன் மற்றும் திருப்பதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story