வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

கடத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கடத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மடத ஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அருந்ததியர் காலனி. இப்பகுதியில் சுமார் 20குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் சுமார்10குடும்பங்களுக்கு வீட்டு மனையோ அல்லது வீடோ ஏதும் இல்லை. சில குடும்பங்கள் தெரிந்தவர்களின் வீட்டில் குடியிருந்து வருகின்றனர். சில குடும்பங்கள் இப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இரவு நேரங்களில் தங்கி வருகின்றனர். ஒரே சாலை வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மடதஹள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மடதஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் டி.சுமதி தங்கராஜ் உடனடியாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து அங்கு இருந்த பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். பின்னர் பொதுமக்கள் கோரிக்கை மனுவினை கொடுத்தனர். கோரிக்கை மனுவினை பெற்று கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் அசோகன், ஊராட்சி செயலாளர் மா.பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது