பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி பரிதாப சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி பரிதாப சாவு
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாடு மேய்க்க சென்ற சிறுமி குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த வேப்பிலை பட்டியை சேர்ந்தவர் சிவன் விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு அனுசயாஶ்ரீ, கார்த்திக், ரித்திகா ஶ்ரீ என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பொந்திக்குட்டை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை அனுசுயா ஸ்ரீ, கார்த்திக், ரித்திகா ஸ்ரீ ,ஆகிய மூவரும் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின், பொந்திக்குட்டையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது குட்டையில் ஒரு பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்த இடத்தின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, ரித்திகாஶ்ரீ,6., தவறுதலாக கால் சறுக்கி அந்த தண்ணீரில் விழுந்துள்ளார். அந்த தண்ணீரில் உயிருக்கு போராடிய ரித்திகாஶ்ரீயை காப்பாற்ற முடியாமல் குழந்தைகள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் குழந்தை தண்ணீரில் மூழ்கியது.

உடனே அக்குழந்தையை மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தாளநத்தம் வி.ஏ.ஓ சுரேஷ் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!