உதவித்தொகை உயர்த்தி கேட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதவித்தொகை உயர்த்தி கேட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கி பேசினார்.

இதில் தெலுங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கு பதிலாக மாதம் மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரத்து ஐநூறிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஷர்மிளா, ராஜமணி,ராஜமணி, சுரேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!