பாப்பிரெட்டிப்பட்டியில் கோயில் சிற்பம் சேதம்: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டியில் கோயில் சிற்பம் சேதம்: போலீசார் விசாரணை
X

சேதமடைந்த கோபுர சிற்பம்.

பாப்பிரெட்டிப்பட்டியில் வேலவன் குன்று முருகன் கோவில் சிற்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ வேலவன் குன்று வேல்முருகன் திருக்கோயில். இந்த திருக்கோயில் கோபுரத்தில் உள்ள 7 சிற்பங்களை மர்ம நபர்கள் அண்மையில் சேதப்படுத்தியுள்ளனர்.

மலைப் பகுதியில் இந்த கோயில் இருப்பதால் சிற்பங்கள் சேதம் அடைந்தது குறித்து தகவல் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கோயில் சிற்பங்கள் கடந்த 20 தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் தெரிவித்த தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!