பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கபட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் பண்டார செட்டிப்பட்டி கிராமத்தில் தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியை தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலையத்தில் வேளாண்மை அலுவலர் சுதா துவக்கி வைத்து விவசாயிகளை வேளாண் மற்றும் அதனை சார்ந்த பல்வேறு துறையின் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மானிய திட்டங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இப்பயிற்சியில் தோட்டக்கலைத் துறையின் சார்பாக உதவி தோட்டக்கலை அலுவலர் புவனேஸ்வரி கலந்துகொண்டு தோட்டக்கலை துறையில் மூலம் வீட்டு காய்கறி விதைகள் மானிய விலையில் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் பயிற்சியில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் சார்பாக அதன் உதவி செயற்பொறியாளர் சண்முகப்பிரியா கலந்து கொண்டு சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் மானியத்தில் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
பட்டு வளர்ச்சித் துறையின் சார்பாக உதவி ஆய்வாளர் சசிகலா கலந்துகொண்டு பட்டு வளர்ச்சித் துறையில் வழங்கப்படும் மானிய மானிய திட்டங்கள் பற்றியும் வெண் பட்டு வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
பயிற்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை என் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசு கலந்து கலந்துகொண்டு விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அரசு குளிர்பதன கிடங்கில் சேமித்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வனத்துறையின் சார்பாக வனவர் பாஸ்கர் கலந்துகொண்டு வேளாண் காடுகள் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுவது குறித்து விளக்கம் அளித்தார்.
கால்நடை மற்றும் பராமரிப்பு துறையின் சார்பாக உதவி கால்நடை மருத்துவர் வாசவன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
வேளாண் பொறியியல் துறையின் சார்பாக அதன் உதவி செயற் பொறியாளர் வேலுசாமி கலந்துகொண்டு வேளாண் இயந்திர வாடகை மையம் குறித்தும். அரசு மானியத்தில் வழங்கப்படும் வேளாண் உபகரணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
மீன்வளத்துறையில் சார்பாக மீன்வள உதவியாளர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு மீன்வளத் துறையில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும். பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் திருப்பதி மற்றும் உழவர் நண்பர் மாதேஸ்வரன் ஆகியோர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் முடிவில் விவசாயிகளுக்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண அட்டை பொறி பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu