பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் சோதனை ஓட்டமாக திறந்துவிடப்பட்ட உபரிநீர்.
தர்மபுரி மாவட்ட எல்லையில் ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து வரும் மழை நீரை சேமிக்க, 1985 ஆம் ஆண்டு வாணியாறு நீர்த்தேக்க அணையை கட்டப்பட்டது.
இந்த அணையில் இருந்து இடது, வலதுபுற கால்வாய்கள் மூலம், வெங்கடசமுத்திரம், மோளையானூர், மெணசி, ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை, பறையப்பட்டி புதூர், அதிகாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ஏரிகள் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில் இடது புற கால்வாய் மூலம் 17 கி.மீ. தூரம் சுகர் மில் வரை விவசாய சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து இடது, வலது புற கால்வாய் வழியாக உபரிநீர் வினாடிக்கு 40 கன அடி என மொத்தம் 80 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வாணியாறு அணையிலிருந்து இடது மற்றும் வலது புற கால்வாய் ஆங்காங்கே பழுதடைந்து தண்ணீர் செல்ல வழி இல்லாமல் இருந்த காரணத்தினால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 16.42 கோடி ரூபாய் மதிப்பில் கால்வாய்கள் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.
இந்தக் கால்வாய் மராமத்து பணிகள் தற்போது முடிவுற்றுள்ளது. வாணியாறு அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீரை கொண்டு இடது மற்றும் வலது புற கால்வாயில் தண்ணீர் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏதாவது பழுது மீண்டும் ஏற்பட்டாலோ அல்லது கதவடைப்பில் பழுது ஏற்பட்டால், பழுது நீக்கம் செய்வதற்காகவே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu