பொம்மிடியில் திருட்டு பீதி: ஆய்வாளர் இல்லாததால் கொள்ளையர்கள் ஜாலி

பொம்மிடியில் திருட்டு பீதி: ஆய்வாளர் இல்லாததால் கொள்ளையர்கள் ஜாலி
X
பொம்மிடி பகுதியில், தொடர் கொள்ளை நடப்பதால், காவல் நிலையத்திற்கு ஆய்வாளரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம். பொம்மிடி பொ.மல்லாபுரம் போரூராட்சியில் தேசிய வங்கிகள். தனியார் வங்கிகள். நிதி நிறுவனங்கள். கூட்டுறவு வங்கிகள்.பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என உள்ளன. நகரின் பாதுகாப்பு பணியை, பொம்மிடி காவல் நிலையம் மேற்கொண்டு வருகிறது.

எனினும், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக, தனி காவல் ஆய்வாளர் இல்லாமல் பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், இரட்டை பணிச்சுமையால், பொம்மிடி பகுதியில் கண்காணிப்பில் தொய்வு ஏற்படுகிறது. கொலை. கொள்ளைகள் அதிகளவு நடைபெற வழிவகுத்துள்ளது.

கடந்த செவ்வாயன்று, பில்பருத்தி பகுதியில், வயதான கிருஷ்ணன் மற்றும் சுலோக்சனா தம்பதியினர், கழத்து அறுத்து நடந்த கொலை செய்யப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி செம்பியானூர் பகுதியில் தனியாக இருந்த வயதான தம்பதியினர் கொடுரமாக தாக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இதேபோல், பொம்மிடி தனியார் நிதி நிறுவத்தில் 41 லட்சம் கொள்ளை போனது; பொம்மிடியில் அமீர் பாய்காலனி பகுதியில் மோட்டார் மெக்கானிக் வீட்டில் நகை கொள்ளை போனது என்று தொடர்ந்து குற்றச்செயல்கள் அரங்கேறி வருகின்றன.

எனவே, பொம்மிடி காவல் நிலையத்திற்கு என தனி ஆய்வாளர் நியமிக்கவும், பொம்மிடி போருராட்சி சார்பில் பேருந்து நிலையம். கடைவீதி பகுதி. ரயில் நிலையப்பகுதி போன்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து செயலாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil