கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை சொற்பொழிவு

கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை சொற்பொழிவு
X

கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கை சொற்பொழிவு.

கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரிமாவட்டம் கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.சி., மற்றும் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான தன்நம்பிக்கையூட்டும் சொற்பொழிவு நிகழ்ச்சி பள்ளியின் சேர்மேன் எவரெஸ்ட் முனிரத்தினம் தலைமையில் நடைபெற்றது‌. பள்ளியின் இயக்குநர் பூவிழி முனிரத்தினம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாராக தொப்பூர் ஜெயலட்சுமி கல்லூரி சேர்மேன் அரிமா சுப்பரமணியன், செயலாளர் காயத்ரி, டாக்டர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே தன்னம்பிக்கை வளர்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இதில் மாணவ, மாணவிகள் வாழ்கையில் உயர்ந்த இடத்தை அடைய லட்சியம், தன்னம்பிக்கையை வளர்த்து ஆசிரியர்கள், பெற்றோர்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதல் படி படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கிரீன் பார்க்பள்ளி மாணவர்கள், கடத்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அலுவலர் ராஜா நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!