பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி. இந்நிலையில் நேற்று இரவு செல்போன் பார்த்து கொண்டு இருந்ததால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவி வீட்டில் தனி அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இன்று அதிகாலை நான்கு மணியளவில் பெற்றோர்கள் பார்த்த போது சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!