சனத்குமார் நதியின் குறுக்கே தடுப்பணை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆய்வு

சனத்குமார் நதியின் குறுக்கே தடுப்பணை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆய்வு
X

சனத்குமார் நதியின் குறுக்கே தடுப்பணை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆய்வு செய்தார்.

சனத்குமார் நதியின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை, சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தர்மபுரி ஒன்றியம் கோணங்கிநாயக்கன அள்ளி ஊராட்சியில் உள்ள செங்கல்மேடு பகுதியில் சனத்குமார் நதியின் குறுக்கே புதிதாக கட்டப்படும் தடுப்பணையை பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட அக்ரோ துணை தலைவர் நெம்பர்.கே.மணி. ஊராட்சி மன்ற தலைவர்கள்,முருகேசன், சரவணன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர், ஜம்பு, கூட்டுறவு சங்க தலைவர், கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், எஸ்.ஆர்.பி.கந்தசாமி, நிர்வாகிகள் ராமசாமி, குமார், வெற்றி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!