வாணியாறு அணையில் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை
வாணியாறு அணையில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் மீட்பு காலங்களில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் வாணியாறு அணை பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கையும், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையும் இணைந்து நேற்று வாணியாறு அணையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு பாப்பிரெட்டிப்பட்டி நிலைய அலுவலர் செல்வமணி தலைமை தாங்கினார்.
அதைத்தொடர்ந்து அணைப்பகுதியில் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை ரப்பர் படகில் சென்று மீட்பது போன்றும், அவர்களை கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்றும், தண்ணீரில் மூழ்கியவர்களை படகை பயன்படுத்தியும், டியூப் அணிந்து சென்று தேடுவது போன்றும் பேரிடர் மீட்பு படையினரும் தீயணைப்பு துறையினரும் இணைந்து தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.
தீயணைப்பு வீரர்கள்
இதற்காக கரைப்பகுதியில் கூரை அமைக்கப்பட்டதுடன் மீட்பு உபகரணங்களும் அணைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு அலுவலர் செல்வமணி, தேசிய பேரிடர் மீட்பு படை யினர், தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu