பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
X
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் கார்த்திக் (வயது 22). பொம்மிடியில் உள்ள தனியார் கார்மென்ஸ்சில் பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை, வீட்டில் இருந்து தனது பைக்கில் வேலைக்கு பொம்மிடிக்கு சென்றார். தர்மபுரி-சேலம் ரோட்டில் ரேகடஹள்ளி அருகே செல்லும் போது, பொம்மிடியில் இருந்து, தர்மபுரி நோக்கி வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். இது குறித்து புகாரின்படி, பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture