கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு
X

காட்டுப்பன்றிகளை மீட்கும் தீயணைப்பு வீரர்கள். 

பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த சில்லாரஹள்ளி பூஞ்சோலை நகரில், ராஜேந்திரன் என்பவரின் விவசாய கிணற்றில் இரண்டு காட்டுப்பன்றிகள் நேற்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் விரைந்து வந்து, 100 அடி ஆழமுள்ள கிணற்றில், 10 அடி தண்ணீரில் உயிருக்கு போராடிய காட்டு பன்றிகளை மீட்டனர். பின்னர் அவற்றை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவற்றை, அருகில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!