பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
X

ஆக்கிரப்பு குடியிருப்புகளை அகற்றும் அதிகாரிகள்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி பச்சை குட்டை ஏரி ,44 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கின் படி முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவின்படி அரூர் ஆர்.டி.ஓ., முத்தையன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட 33 பேருக்கு மாற்று இடத்தில் குடியிருப்பு கட்டிக்கொள்ள பட்டா வழங்கப்பட்டது.இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தாசில்தார் சுப்பிரமணி, உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags

Next Story