இராமியம்பட்டியில் சிமெண்ட் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

இராமியம்பட்டியில் சிமெண்ட் சாலையால்  பொதுமக்கள் கடும் அவதி
X

ராமியம் பட்டியில் சிமெண்ட் சாலை மீது கிரஷர் பவுடர் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இராமியம்பட்டியில் சிமெண்ட் சாலையால் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் யூனியன் ராமியம்பட்டி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களுக்கு இது மைய கிராமமாகும்.

இங்குள்ள தேசிய வங்கிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ராமியம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ராஜவீதி, தேசிய வங்கி ராமர் கோவில் வரை ரூ.12.30 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கபட்டது.

இந்த சாலை தரமற்ற நிலையில் போடப்பட்டுள்ளது. இதனை மறைக்க இந்த சிமெண்ட் சாலையின் மேல் பகுதியில் கிருஷர் பவுடர் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது தூசு தொடர்ந்து பறப்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மூச்சு தினறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வீடு முழுவதும் கிருஷர் பவுடர் வீட்டின் குடிநீரிலும் விழுவதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குழுந்தைகள், பெரியவர்களுக்கு தொடர் இருமல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே உடனடியாக அந்த கிரஷ்ஷர் வேஸ்டேஜ் அகற்றி முறையாக சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!