தர்மபுரி மாவட்டம் வடகரையில் குடிநீர் பைப் லைன் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் வடகரையில் குடிநீர் பைப் லைன் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X
கடத்தூர் அருகே உள்ள வடகரையில் தெருக்களில் குடிநீர் பைப் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் யூனியன் தென்கரைக்கோட்டை பஞ்சாயாத்துக்கு உட்பட்டது வடகரை கிராமம். இந்த கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பைப் லைன் இணைப்புகள் உள்ளன. இதையடுத்து கிராம மக்கள் குடிநீர் பிடிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட பைப்புகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நாள்தோறும் குடிநீர் எடுப்பதற்காக பெண்கள், முதியோர் பல்வேறு சிரமங்கள் அடைகின்றனர்.

தெருக்களில் குடிநீர் இணைப்புகள் இருந்தால் எளிதில் குடிநீர் பிடித்து செல்ல முடியும் என பெண்கள் கூறுகின்றனர். எனவே வடகரை கிராமத்தில் ஒரே இடத்தில் குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதை அகற்றிவிட்டு குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் பைப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
video editing ai tool