பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை: பெண் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை: பெண் கைது
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா மேற்பார்வையில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தீவிர தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை செய்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி இலட்சமாபுரத்தில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது செந்தில்குமார் மனை ஆண்டாள்,வயது 35.என்பவர் அரசால் தடை செய்ய பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை யை பெட்டி கடையில் விற்பனை செய்ததை கண்டு பிடித்தனர். இதனை யடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் ஆண்டாளை கைது செய்தனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?