பொம்மிடி அருகே தம்பதிகள் அடித்துக் கொலை: 5 பேரிடம் போலீசார் விசாரணை

பொம்மிடி அருகே தம்பதிகள் அடித்துக் கொலை: 5 பேரிடம் போலீசார் விசாரணை
X
பொம்மிடி அருகே தம்பதி அடித்துக்கொலை சம்பவம் 5 பேரிடம் போலீசார் விசாரணை

பொம்மிடி அருகே கணவன், மனைவி இருவரையும் மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து தனிப்படை போலீஸôர் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியை அடுத்த பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (80). இவரது மனைவி சுலோக்சனா (75) ஓய்வுப் பெற்ற ஆசிரியை. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் சேலத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். விவசாயி கிருஷ்ணன், அவரது மனைவி சுலோக்சனா ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், கணவன், மனைவி இருவரையும் மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்திருப்பது செ

ஜூலை 13ந்தேதி தெரிவந்தது. இந்த சம்பவம் அறிந்த சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தம்பதி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது : பில்பருத்தியில் விவசாயி கிருஷ்ணன், அவரது மனைவி சுலோக்சனா ஆகிய இருவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 5 பேர் பிடிப்பட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை இரவு ஒரு கும்பல் விவசாயி கிருஷ்ணன் வீட்டில் நுழைந்து ஏ.டி.எம் கார்டு, செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவைகளை திருடியுள்ளனர். தொடர்ந்து, வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற ஆசிரியை சுலோக்சனா கழுத்தில் இருந்த தாலிக் கொடியை பறித்துள்ளனர். அப்போது கூச்சலிட்டதால் சுலோக்சனாவை அடித்துக் கொலை செய்துள்ளனர். பிறகு அவரது கணவர் கிருஷ்ணனையும் கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பில்பருத்தி பகுதியைச் சேர்ந்த மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
video editing ai tool