/* */

பாப்பிரெட்டிபட்டி: கள்ளத்துப்பாக்கி குறித்து தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள மலை கிராமங்களில், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் பொது இடத்தில் போட்டு செல்லலாம் என, போலீசார் தண்டோரா மூலம் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிபட்டி: கள்ளத்துப்பாக்கி குறித்து தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு
X

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே கள்ளதுப்பாக்கி குறித்து, தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் காவல் உட்கோட்டத்துக்குட்பட்ட அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர்கள் மனோகரன், ராஜேந்திரன், பாப்பம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா மணி ஆகியோர் மலையோர கிராமங்களான பாப்பம்பாடி, அண்ணாநகர், இருளப்பட்டி, கல்லாத்துக்காடு, சாளூர், நாகலூர், காமராஜர் நகர் உள்ளிட்ட மலை கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கள்ளத்தனமாக துப்பாக்கி யாராவது வைத்துக் கொண்டு உள்ளார்களா? என்று கேட்ட போலீசார், புதிய நபர்கள் யாராவது ஊருக்குள் வந்தால் அவர்களை பற்றி தகவலை தெரிவிக்க வேண்டும் என, தண்டோரா போட்டு, பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். யாரிடமாவது கள்ளதுப்பாக்கி இருந்தால், அவற்றை ஊர் பொது இடத்தில் வைத்து விட்டு செல்லலாம் என்றும், அவ்வாறு வைத்து விட்டுப் போகும் துப்பாக்கி சம்பந்தமாக எவ்வித வழக்கும் போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்ய மாட்டாது என்றும் போலீசார் உறுதிமொழி தந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 23 Jun 2021 3:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்