பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கலெக்டர் திவ்யதர்ஷினி திடிர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கலெக்டர் திவ்யதர்ஷினி திடிர் ஆய்வு
X

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர் திவ்யதர்ஷினி.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திடிர் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை முதல் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி , வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கபடுகிறாதா என ஆய்வு செய்தார்.

மேலும், ஒவ்வொரு அலுவலரும் தனித்தனியாக பதிவேடுகள் பராமரிப்பதை ஆய்வு செய்து, மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திடிர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தாசில்தார் பார்வதி, தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, வி.ஏ.ஓ பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!