பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரச்சாரம்.!

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரச்சாரம்.!
X
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ஏ.கோவிந்தசாமி கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ஏ.கோவிந்தசாமி கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

அதே போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., ஏ.கோவிந்தசாமி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடந்த சில நாட்களாக அதிமுக, பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் அமோக வரவேற்பு அளிக்கப்படுவதாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!