வியாபாரிகள்- பொதுமக்களிடம் மஞ்சப்பை விநியோகம் செய்த பழனி சமூக ஆர்வலர்கள்

வியாபாரிகள்- பொதுமக்களிடம்   மஞ்சப்பை விநியோகம் செய்த  பழனி சமூக ஆர்வலர்கள்
X

 பழனி உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கும், காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும் மஞ்சப்பை விநியோகித்த சமூக ஆர்வலர்கள்

பழனியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மஞ்சப்பை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்திருந்த மஞ்சப்பை களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து பழனி சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் அறிவித்த மஞ்சள் பை இயக்கத்தை வலுப்பெறச் செய்யும் வகையில் பழனி உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கும், காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து, அனைவரும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக மஞ்சள் பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன், பழனி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு இலவசமாக மஞ்சள் பைகளை வழங்கினர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself