கடத்தூர் அருகே 46லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள்: பூமி பூஜையுடன் பணி துவங்கியது

கடத்தூர் அருகே  46லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள்:  பூமி பூஜையுடன் பணி துவங்கியது
X

குழிக் கொள்ளைை பகுதியில் ரோடு போட பூமி பூஜை போடப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மண்சாலையை ஜல்லி சாலையாக மாற்றும் பணிகள் ஆரம்பமானது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் திட்டத்தின் மூலம் முத்தனூர் ஓம்சக்தி கோவில் முதல் ந.நடூர் வரையில் மண்சாலையை ஜல்லி சாலையாக மாற்ற ரூ 28,93,000/- மதிப்பீட்டில் பணிகள் ஆரம்பமானது. அதற்கு ஊராட்சி மன்றத்தின் மூலம் வேலையை துவங்க பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிகழ்சியில் ஊராட்சி மன்ற தலைவி ஞானம்வடிவேல், முன்னாள் தலைவர் வடிவேல், திமுக நிர்வாகி சிவபிரகாசம், துணைத்தலைவர் அம்புரோஸ், பாமக ஒன்றிய செயலாளர் கலைமணி, சிவன், சென்னகிருஷ்ணன், சென்னப்பன் திருமுருகன், ரஜினி ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் அஸ்தகியூர் குழிக்கொல்லை கிராமத்தில் அரிச்சந்திரன் வயல் முதல் சிவபிரகாஷம் வீடு வரை ஜல்லி சாலை அமைக்க ரூ17,37,117/- நிதி ஒதுக்கப்பட்டது, அதற்கான பணிகளையும் துவக்கி பூமி பூஜைபோடப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!